கனடாவில் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் 2 சிறுமிகள் சடலங்களாக மீட்பு

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனடாவில், ஹோட்டல் ஒன்றில், மர்மமான ,சிறுமிகள் சடலங்களாக, மீட்பு
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisements

ரெட் டீர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவரும், செய்ல்வான் லேக் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலில் இந்த இரண்டு சிறுமிகளும் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியரின் மரணம் கொலையாகவோ அல்ல தற்கொலையாகவோ இருக்கக் கூடிய சாத்தியமில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் மருந்துப் பொருள் மித மிஞ்சிய அளவில் பயன்படுத்துகை அல்லது போதைப் பொருள் பயன்பாடு காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Click To Watch





This will close in 20 seconds