சீனாவில் மணல் புயலால் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொங்கோலியாவின் தெற்கே ஏற்பட்டுள்ள மோசமான புயலால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
Advertisements
அந்த மணல் புயல் 2 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரவியிருக்கிறது. இதனால் தலைநகர் பெய்ச்சிங்கும் சீனாவின் இதர வடபகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மணல் புயல் காரணமாகப் பெய்ச்சிங்கில் கடந்த திங்கட்கிழமைகாற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையைத் தாண்டியது.
காற்றில் கலந்துள்ள நுண்ணிய மாசுத் துகள்கள் கண்கள், மூக்கு முதலியவற்றுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு நுரையீரலையும் பாதிக்கக்கூடும்.
எனவே முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இன்று பெய்ச்சிங்கையும் இதர சில மாநிலங்களையும் தொடர்ந்து மணல் புயல் தாக்கக்கூடும் என வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
Advertisements