முன்னாள் காதலனை காரில் கடத்தி சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
யார் அந்த பெண்?
லட்சுமி பிரியா என்ற பெண் கேரள மாநிலத்தில் வசித்து வருகின்றார். இவர் தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
இவர் வீட்டின் அருகில் உள்ள நபர் ஒருவரிடம் காதல் வசப்பட்டுள்ளார். அவருடன் வெளியில் செல்வது மற்றும் தனியாக சந்தித்துக் கொள்வது என வழக்கமாக இருந்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் தனது கல்லூரியில் அவருடன் கல்வி கற்கும் ஒரு மாணவனையும் காதலித்துள்ளார். ஆகவே தனது முன்னாள் காதலனிடன் நாங்கள் பிறிந்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
இதற்கு மறுத்த முன்னாள் காதல், தினமும் லட்சுமி பிரியாவை சந்திக்க முயன்றுள்ளார். அதனை மறுத்துக் கொண்டே வந்தார் லட்சுமி பிரியா…

முன்னாள் காதலனுக்கு நடந்தது என்ன?
லட்சுமி பிரியாவை சந்திக்க முயன்ற முன்னாள் காதலனை ஒரு நாள் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு சந்திக்க வேண்டும் என்று அழைத்துள்ளார்.
ஆகவே குறித்த இடத்திற்கு வந்த முன்னாள் காதலனை கார் ஒன்றில் ஏற்றி லட்சுமி பிரியாவும் அவரது தற்போதைய காதலனும் நண்பர்களும் சித்திரவதை செய்துள்ளனர்.
புகையிலையினால் அவரது உடம்பு முழுவதும் சூடு வைத்துள்ளனர். மேலும் அவரது தொலைபேசி மற்றும் பணத்தை பறித்துவிட்டு வீதியில் வீசியுள்ளார்கள்.
பொலிஸாரிடம் புகார் அழித்த பெற்றோர்
தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர். இதன் பின் தேடுதல் பணியில் ஈடுபட்ட பொலிஸார் வீதியில் தீக்காயங்களுடன் காணப்பட்டவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
லட்சுமி பிரியாவை கைது செய்த பொலிஸார் அவரது தற்போதைய காதலனையும் நண்பர்களையும் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.