SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள்

துஷ்பிரயோகம், பொலிஸ் ,கான்ஸ்டபிள், கைது,

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள்

சமனலவெவ அணைக்கட்டுக்கு  சென்றிருந்த  18 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது காதலனுடன் அணைக்கட்டு பகுதிக்குச்  சென்றுள்ளார், இதன்போது  சந்தேக நபரான கான்ஸ்டபிள்  காதலனின் கைகளுக்கு  கைவிலங்கிட்டு  யுவதியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

Advertisements

பின்னர் அங்கு வைத்து  குறித்த கான்ஸ்டபிள் யுவதியின் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

துஷ்பிரயோகம், பொலிஸ் ,கான்ஸ்டபிள், கைது,

யுவதியைக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அந்த கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் முன்னர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒலிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் ஹம்பேகமுவ  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisements

Related posts

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை சந்திக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்

Chaya

அதிரடி சுற்றிவளைப்பில் விடுதியில் சிக்கிய 9 அழகிகள்!

Harini

இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் – பௌத்த மதகுரு கைது!

Chaya