உலக மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடிக்கவுள்ள நாடு தொடர்பில் வெளியான தகவல்
உலக மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடிக்கவுள்ள நாடாக இந்தியா மாற்றமடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா இவ்வாண்டு உலக மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடிக்கவிருக்கிறது.
இளைய தலைமுறையின் எண்ணிக்கை பெரிது என்பது இந்தியாவின் மிகப்பெரிய பலமாகும்.
ஆனால் நிலைமை மாறலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓய்வூதியமோ, மருத்துவக் காப்புறுதியோ இல்லாத அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.
முறையான பொருளியல் அமைப்புக்கு வெளியே கிடக்கும் அவர்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று இந்திய அரசாங்கத்தின் அண்மைய புள்ளிவிவரம் சொல்கிறது.
இப்போது இந்திய மக்களில் 65 விழுக்காட்டினர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். ஆனால் அடுத்த இருபது ஆண்டில் முதியோர் எண்ணிக்கை உயரும்.
பிறப்பு விகிதம் குறைகிறது. இந்தியா தன்னைப் புதுப்பிப்பது சிரமம். இளையர் விகிதம் சரியும் என்கிறது இந்தியாவின் மக்கள்தொகை அறநிறுவனம்.