SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

ரயில்களில் மோதி மூவர் உயிரிழப்பு

ரயில்களில், மோதி ,மூவர், உயிரிழப்பு

வெவ்வேறு இடங்களில் ரயில்களில் மோதி மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertisements

தெஹிவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்கிஸைச் சேர்ந்த 28 வயது இளைஞரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

ரயில்களில், மோதி ,மூவர், உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் தெஹிவளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மருதானை ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த 71 வயது வயோதிபரே பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மருதானைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

வாதுவ ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

வாத்துவ தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் ரயில் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாத்துவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisements

Related posts

முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆசிரியையின் கள்ளக்காதலன் மாணவியுடன் அத்துமீறல்

admin

ரஷ்ய படையெடுப்பில் 262 உக்ரைன் விளையாட்டு வீரர்களுக்கு நேர்ந்த சோகம்!

Harini

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலைகளின் பின்னணி என்ன..!

Harini