நூடுல்ஸில் கிடந்த தங்க சங்கலி! ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம்
மலேசிய நாட்டில் கடை ஒன்றில் நபரொருவர் வாங்கிய நூடுல்ஸில் தங்கச் சங்கிலி கிடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தினை முகநூல் பக்கத்தில் தங்கம் பெற்ற ஆண்டி டான் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Advertisements
நூடுல்ஸுடன் தங்கச் சங்கிலி இருக்கும் படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார். அதனுடன் அழுதுகொண்டே சிரிக்கும் emoji-யையும் அவர் பகிர்ந்திருந்தார்.
மேலும் குறித்த பதிவில் அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளளார்.
பதிவின்கீழ் அவரின் நண்பர்கள் சிலர் கடையின் முகவரியைக் கேட்டிருந்தனர். எங்கே வாங்கினீர்கள் நானும் வாங்க வேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சங்கிலி எப்படி உணவில் வந்தது என்பது தெரியவில்லை. அது உண்மையான தங்கமா என்ற தகவலையும் டான் குறிப்பிடவில்லை.
Advertisements