யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.யாழ் சுன்னாகம் ஆலடி பகுதியில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாக பொலிஸாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
Advertisements
Advertisements