SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

நாகதீபய ஆகியது நயினாதீவு! தொடரும் சிங்களமயமாக்கல்

நயினாதீவு, jaffna, Nainathivu ,Shipping Ticket,

நாகதீபய ஆகியது நயினாதீவு! தொடரும் சிங்களமயமாக்கல்

யாழ்ப்பாணம் – குறிக்கட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு செல்லும் கப்பல் பயணக் கட்டணச் சீட்டில் நயினாதீவு எனும் பெயர் அகற்றப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுநாகதீபம் என்பது அந்தக் காலத்தில் இருந்தே புலக்கத்தில் இருந்த ஒரு தீவுப் பகுதிக்கான பெயர்.

Advertisements

 நயினாதீவு, jaffna, Nainathivu ,Shipping Ticket,

நயினாதீவு என்பது முன்பிருந்த பயன்படுத்தப்படுகின்ற தமிழ் பெயர். நாகதீபம் என்ற பெயரை சிங்களவர்கள் நாகதீப என்று மாற்றினார்கள். நயினாதீவில் நாகபூசணி அம்மன் கோவிலும் இருக்கின்றது. நாகவிகாரையும் இருக்கின்றது.இதற்கு ஒரே படகுச் சேவை குறிக்கட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும் போது இங்கு இரண்டு விதமான இன பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும்  பயணிப்பார்கள்.

 நயினாதீவு, jaffna, Nainathivu ,Shipping Ticket,

ஆனால், தமிழிலே நயினாதீவு என்பதுதான் தொடக்கத்தில் இருந்து பாவனையில் உள்ள பெயர். அப்படி இருக்கும் போது நாகதீபய என்று மட்டும் எழுதப்பட்டுள்ள பயண கட்டணச் சீட்டு வழங்கப்பட்ட விடயம் மிகப் பெரிய சலனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப் பயண கட்டணச் சீட்டு சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றது.அண்மைக் காலங்களில் தமிழர் பகுதியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நயினாதீவு, jaffna, Nainathivu ,Shipping Ticket,

Advertisements

Related posts

கல்முனையில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தவர் கைது!

admin

சீனாவின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு – ஐவர் பலி

Harini

விபரீதமான டிக்டாக் விளையாட்டு: பற்றி எரிந்த 16 வயது இளைஞரின் உடல்

Harini