அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான இறப்புகள் 50 வீதம் அதிகரிப்பு!
அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே துப்பாக்கி தொடர்பான இறப்புகள் இரண்டு ஆண்டுகளில் 50 வீதம் அதிகரித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மைய பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய காலப்பகுதியில், பதின்மவயதினிடையே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் 1732 ஆகும். ஆனால் இந்த எண்ணிக்கை 2021 இல் 2590 ஆக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 46 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Advertisements
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி டென்னசி, நாஷ்வில்லில் பள்ளியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பியூ ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
Advertisements