மகனின் விந்தணுவை கொண்டு குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை!
ஸ்பெயின் நாட்டின் நடிகை ஒருவர் தனது இறந்து போன மகனது விந்தணுவை உறைய வைத்து, அதனை கொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இறந்து போன மகன்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த (ana obregon)அனா ஒப்ரெகன்(68) என்ற நடிகைக்கு அலெக்ஸ் லெகியோ என்ற மகன் இருந்திருக்கிறார். அவர் தனது 27 வயதில் கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
தற்போது அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இது புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டு பெண்ணிற்கு பிறந்த குழந்தை.
வாடகைத் தாயான இவருக்கு, நடிகையின் இறந்து போன மகனின் விந்தணு மூலம் குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவில் வாடகைத் தாய் சட்டவிரோதமாக கருதப்படாததால், புளோரிடாவின் மியாமியில் வசிக்கும் வாடகைத் தாய்க்கு, இறந்து போன மகனின் விந்தணு மூலம் குழந்தை கருத்தரிக்கப்பட்டது.
இறந்த மகனின் விந்தணு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இது சாத்தியமானதென தெரிய வந்துள்ளது.
மகனின் கடைசி ஆசை
ஸ்பெயினில் வாடகைத் தாய் மற்றும் குழந்தைகளின் தனியுரிமைக்கான உயிரியல் நெறிமுறைகள் பற்றி ஒரு பெரிய விவாதத்தை எழுப்பியது. இதற்கிடையில், ஒப்ரெகன் தனது சொந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்து, பேத்தியை மகளாக்கிக் கொண்டுள்ளார்.
”இந்தப் பெண் குழந்தை என் மகள் அல்ல, என் பேத்தி” என நடிகை அனா ஒப்ரெகன் பிரபல பத்திரிகைக்கு கொடுத்த ஒரு நேர்காணலின் போது, அதன் அட்டை படத்துக்காக குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார்.
”இறந்து போன என் மகனின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்? குழந்தையை இழந்த பெற்றோருக்கு மட்டுமே இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு” என ஒப்ரெகன் கூறியுள்ளார்.
இச்சம்பவம் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் இது பெண்களுக்கு எதிரான வன்முறையின் ஒரு வடிவம் என்று அந்நாட்டு அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.