SwissTamilNews SwissTamilNews SwissTamilNews SwissTamilNews
SriLankaTamilNews

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டம் – ஒருவர் பலி!

Death, Ampara, murder, கைது,

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டம் – ஒருவர் பலி!

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisements

Death, Ampara,
murder, கைது,

சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற நிர்வாக தெரிவு கூட்டம் ஒன்றில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் சிலர் எதிர்வரும் நோன்பு பெரு நாள்முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்ய பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்த மோதலில் ஈடுபட்டதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Death, Ampara,
murder, கைது,

மேலும் இம் மோதல் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4 பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Related posts

இலங்கை ரூபா தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

admin

உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் : தென்னிலங்கையில் ஏற்பட்ட விசித்திரம்

Chaya

சீனாவில் பரவும் ” ஜாம்பி வைரஸ் “..?? வெளியான உண்மை..!

Chaya