தமிழர் பகுதியில் கடையில் காலையுணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இன்றுகாலை மன்னார் பேசாலை சாப்பாட்டுக் கடை ஒன்றில் காலையுணவு வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. குறித்த நபர் கடையில் ரொட்டி வாங்கியிருந்தார்.
ரொட்டியுடன் அவருக்கு வழங்கப்பட்ட குழம்பில் பூரான் இருந்துள்ளது. சாப்பிட தட்டில் ரொட்டியை போட்டு குழம்பை ஊற்றியவருக்கு குழம்பில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அவரது நண்பர் ஒருவர் பூரான் கறியுடன் வழங்கப்பட்ட ரொட்டியை தனது முகநூலில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்யும் கடைகளை அடையாளம் காணும் நோக்கில் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisements