ரஷ்யாவில் கூலிப்படை ஏவி தாயை கொலை செய்த மகள்!

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பெண் கூலிப்படையை ஏவி தனது தாயை கொலை செய்துள்ளார். அனஸ்டாசியா மிலோஸ்கயா என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

இவருக்கு, பதினான்கு வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட நிலையில் குப்பைகள் சேகரிக்கும் இடத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

இந்த சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் அந்த நபர் அணிந்திருந்த ஆடையை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் அனஸ்டாசியா மிலோஸ்கயா என்பது உறுதியானது.

இதையடுத்து பொலிஸார் அனஸ்டாசியா மிலோஸ்கயாவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கி கொலை செய்ததாக, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, பொலிஸாருக்கு அனஸ்டாசியா மிலோஸ்கயாவின் மகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

அப்போது, அனஸ்டாசியா மிலோஸ்கயாவின் மகளே கூலிப்படையை நியமித்து பெற்ற தாயை கொன்றதும் சிறுமிக்கு துணையாக இருந்ததாக அவளது காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார் அவரிடம் விசாரணை செய்ததில், அவர் குற்றைத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், பொலிஸார் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button