டாக்சி ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய புலம்பெயர்ந்த இந்தியர்., இன்று 1.7 லட்சம் கோடிக்கு அதிபதி! யார் அவர்?
டாக்சி ஓட்டுநராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று கிட்டத்தட்ட ரூ. 1.7 லட்சம் கோடிக்கு அதிபதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணக்கார இந்தியர்களில் ஒருவராக உள்ளார் முகேஷ் ஜக்தியானி.
புலம்பெயர் இந்தியர்களின் வெற்றிக்கான அடையாளம்
துபாயை தளமாகக் கொண்ட கோடீஸ்வர வணிக அதிபரான ‘மிக்கி’ ஜக்தியானி வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் உயர்ந்த புலம்பெயர்ந்த இந்தியராக சாதனை படைத்துள்ளார்.
வாழ்க்கையின் தொடக்கத்தில் டாக்சி ஓட்டி, ஹோட்டல் அறைகளை சுத்தம் செய்த அவர், புதிய வாய்ப்புகள் நிறைந்த அமீரகத்தில் இன்று புலம்பெயர் இந்தியர்களின் வெற்றிக்கான அடையாளமாக மாறியுள்ளார்.
லண்டனில் ஹோட்டல் கிளீனர்
ஜக்தியானி குவைத்தில் பிறந்தார், ஆனால் தனது பள்ளிப்படிப்பை இந்தியாவில் சென்னை மற்றும் மும்பையில் முடித்து, பின்னர் லண்டனில் உள்ள கணக்கியல் பள்ளியில் சேந்தார். அவர் தனது வாழ்க்கையை டாக்ஸி ஓட்டி மற்றும் லண்டனில் ஹோட்டல் கிளீனராகத் தொடங்கினார். இளம் வயதிலேயே தனது பெற்றோர் மற்றும் சகோதரரை இழந்தார்.
குடும்பம் இல்லாமல் மிக்கி பஹ்ரைனுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் 6,000 டொலர் பணத்துடன் 1973-ல் திறந்த குழந்தை பொருட்கள் தயாரிப்புக் கடை மூலம் வணிக உலகில் நுழைந்தார்.
கணக்கியல் பள்ளியிலிருந்து வெளியேறிய போதிலும், அவர் தனது நிறுவனத்தை ஏராளமான வணிக புத்திசாலித்தனத்துடன் விரிவுபடுத்தத் தொடங்கினார்.
20 நாடுகளில் 6,000 கடைகள்
கடையை தொடங்கி ஒரு தசாப்தத்திற்குப் பிறகு 6 கடைகளாகவும், பின்னர் மெதுவாகவும் சீராகவும் இந்தியா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா வரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,000 கடைகளாக விரிவுபடுத்தினார்.
குறிப்பிடத்தக்க நான்கு தசாப்தகால தொழில் முனைவோர் வாழ்க்கையில், ஜக்தியானி ஏப்ரல் 2023 நிலவரப்படி $5.2 பில்லியன் (இலங்கை பணமதிப்பில் ரூ. 1.7 லட்சம் கோடி) நிகர மதிப்பைக் குவித்துள்ளார்.
அவரது துபாயை தலைமையிடமாகக் கொண்ட Landmark Group சுமார் $9.5 பில்லியன் (இந்திய பணமதிப்பில் ரூ. 3 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது.
மிக்கி ரேணுகா ஜக்தியானியை மணந்தார், அவர் இன்று பில்லியன் டொலர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராக உள்ளார். தம்பதியருக்கு ஆர்த்தி, நிஷா மற்றும் ராகுல் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் நிறுவனத்தின் குழு இயக்குநர்களாக உள்ளனர்.