பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு படை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் செய்தவர்களை தண்டிக்க பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு படை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பாலியல் குற்றங்களுக்கு எதிரான படை
பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்களை உடனடியாக கண்டறிந்து வலுவான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய புதிய சிறப்பு படை ஒன்றை பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த புதிய பணிக்குழுவை அறிவிக்க பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் இருவரும் லீட்ஸில் குழுமினர்.
பிரதமர் எச்சரிக்கை
சிறப்பு பிரிவின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை கண்மூடி கொண்டு இருக்க முடியாது என்று எச்சரித்தார்.
மேலும் சமூகங்களில் உள்ள சுரண்டலை வேரறுக்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.
அத்துடன் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை, எந்த கல்லையும் விட்டுவிடக் கூடாது, தீய கும்பல்களையும் இளைஞர்களின் நோய்வாய்ப்பட்ட துஷ்பிரயோகங்களையும் முற்றிலுமாக அகற்றுவதில் இன்று இங்குள்ள நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன் என தெரிவித்துள்ளார்.
இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி, பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு, இனி குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது எனவும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.