விஜய் படம் குறித்து வருத்தத்துடன் பேசிய ஏ.ஆர். முருகதாஸ்.. இதுதான் நடந்ததா
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளிவந்த தினா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இதன்பின், இவருடைய தயாரிப்பில் உருவாகி வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் 1947. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார்.
தர்பார் படத்திற்கு பின் விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் படம் இயக்குவதாக இருந்தார். ஆனால், அப்படம் திடீரென வேறொரு இயக்குனரின் கைக்கு போனது. இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
கைகூடவில்லை
இதில் ‘ விஜய் படத்திற்காக நான் ஒரு வருடம் கடினமாக உழைத்தேன். ஆனால், அந்த படம் எனக்கு கிடைக்கவில்லை ‘ என கூறியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.