பிரபல தென்னிந்திய நிகழ்ச்சியில் மாயக்குரலில் அனைவரையும் மாயக்கும் இலங்கைப் பெண்!
தென்னிந்தியாவில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றில் சரி க ம ப நிகழ்ச்சி இசைச் சுவைஞர்களை கட்டிப் போடும் நிகழ்வாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் நம் கவலைகளை மறக்கச் செய்து புது உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. எந்த குரங்குச் சேட்டைகளும் இல்லாமல் இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வாய் எல்லோர் மனதையும் கவர்ந்து செல்கிறது.
இந்த இசை கோலத்தில் மாதுளானி எனும் மாயக்குரல் தனித்துவமாய் ஒலித்து நம் மனதை கொள்ளை கொண்டு அள்ளிச் செல்கிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அவரது வளர்ச்சியை அவதானித்து வருகிறேன்.
படிப்படியாக தன் இசைப் பயிற்சியின் மூலம் பல தடைகளைத் தாண்டி இன்று உலகம் முழுமைக்கும் தெரியும் இசை முகமாய் ஒளிர்கிறது.
ஈழத்தின் முத்தாய் அமைந்த மூதூரை தன் வேராகக் கொண்ட மாதுளானி நம் மண்ணுக்கு பெருமை சேர்த்து நிற்கிறார்.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான பாடல்களைத் தெரிவு செய்து தன் திறனை நிருபித்து நிற்கிறார். நிகழ்வில் ஓரிரு தடவை தவிர எல்லா நாட்களிலும் தங்கச் சாரலில் மூழ்கி எழுகிறார்.
லண்டனில் பிறந்து வாழ்ந்தாலும் வேரையும் ஊரையும் மறக்காத தமிழ் மீதான காதலும் இசையுடனான ஆற்றலும் அவரை இன்று உலக அளவில் உயர்த்தி இருக்கிறது.
ஒரு வகையில் நான் மாதுளானியின் சொந்தக்காரனும் அதைத் தாண்டி சொந்த ஊரவன் . கடந்த சில வாரங்களில் மாதுளானியின் குரல் இசையின் உச்சங்களைத் தொட்டுச் செல்கிறது.
இந்நிலையில், அவருக்கு அவரது பெற்றோருக்கும் பாராட்டுக்களை முகநூலில் இலங்கையை சேர்ந்த பாலசுகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உன் இசையில் குரலில் மகிழ்ந்து கனிகிறேன் மகளே எனவும் அவரை பாராட்டி இந்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.