மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி; சிக்கிய 6 யுவதிகள்!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டதில் ஆறு யுவதிகள் உட்பட எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கல்கிசையில் இயங்கி வந்த விபசார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆண் ஒருவரும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisements

சந்தேகநபர்கள் 20 மற்றும் 32 வயதுடைய வெலிமடை, காலி, தனமல்வில, வத்தளை மற்றும் பசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 642b8f0022f86

சந்தேகநபர்கள் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதேவேளை கொள்ளுப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதுடைய பயாகல, வென்னப்புவ மற்றும் மொரவக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button