மஞ்சள் நீராட்டுவிழா நடத்த வெளிநாட்டில் இருத்து தாயகம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துய்ரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisements

23 642ad58b39579

ஒருவர் பலி மற்றுமொருவர் மருத்துவமனையில்

விபத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 வயது சறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

23 642ad58b8049d
உயிரிழந்த பெண் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான முல்லைத்தீவு – சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button