ரஷ்யாவின் தீவிர ஆதரவாளர் கொலை; 26 வயதான யுவதி கைது!
உக்ரேனிற்கு எதிரான ரஷ்யாவின் யுத்தத்தின் தீவிர ஆதரவாளரான யுத்த புளொக்கர் கொல்லப்பட்டமை தொடர்பில பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். டர்யா டிரெப்போவா என்ற 26 வயதான யுவதியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஏற்கனவே உள்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இருந்தவர் என தெரிவித்துள்ள ரஷ்ய அதிகாரிகள், அவர் கைதுசெய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
அத்துடன் கைதான யுவதியின் குடும்பத்தையும் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.