ஹிஜாப் அணியாத பெண்கள் மீது யோகட் வீச்சு; ஈரானில் கைதுசெய்யப்படும் ஆபத்தில் பெண்கள்!
ஈரானில் ஹிஜாப் அணியாதமைக்காக நபர் ஒருவர் பெண்கள் மீது யோகட் கப்பினை வீசியதை தொடர்ந்து அதிகாரிகள் பெண்களை கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் ஈரானின் வடகிழக்கு நகரான சான்டிசில் இடம்பெற்றுள்ளது. ஹிஜாப் அணியாத பெண்ணொருவரை நோக்கி நபர் ஒருவர் செல்வதையும் அவருடன் உரையாடுவதையும் காணமுடிகின்றது.
அதன் பின்னர் அவரை நோக்கி யோகர்ட்டினை எறிவதையும் பின்னர் இரு பெண்களையும் தாக்குவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் பொதுவெளியில் ஹிஜாப் அணியாதமைக்காக இரண்டு பெண்களும் கைதுசெய்யப்பட்டனர் .
அதேசமயம் அமைதியை குலைத்தமைக்காக யோகட் எறிந்த ஆணும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.