லண்டனில் தானியங்கி காரில் பயணம் செய்த உலக கோடீஸ்வரர்!

உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ், லண்டனில், ஓட்டுநரில்லா தானியங்கி காரில் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெய்வ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுவரும் மாதிரி தானியங்கி காரில், பில் கேட்ஸும், வெய்வ் நிறுவன சி.இ.ஓ-வும் சேர்ந்து பயணித்தனர்.

Advertisements

இந்நிலையில் வாகன போக்குவரத்தும், கூட்ட நெரிசலும் நிறைந்த லண்டன் மாநகர வீதிகள் வழியாக சென்ற தானியங்கி காரை, பெண் ஒட்டுநர் ஒருவர் அடிக்கடி ஸ்டீயரிங்கை அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தார்.
23 6429a6fd54d9e
பெரும்பாலும் தானியங்கி கார்கள், அவற்றின் memory-ல் feed செய்யப்பட்டுள்ள பாதைகள் வழியாக மட்டும் இயங்கிவந்த நிலையில், இந்த காரோ, ஒவ்வொரு சூழலிலும் அது இயக்கப்படும் விதத்தை வைத்து அதன் அல்காரித்தமை தானே மேம்படுத்திக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்திரங்கள் கார் ஓட்டும் காலம் விரைவில் வரப்போவதாக பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button