எரிமலை உச்சியில் ஒரு மாத காலம் வாழ்ந்து சாதனை படைத்த விராங்கனை!

இளம் தடகள வீராங்கனையான பெர்லா டிஜெரினா எரிமலையின் மேல் ஒரு மாத காலம் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் விதவிதமான வினோத செயல்களில் ஈடுபட்டு சாதனை படைப்பதில் பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.                                                                                                                           

Advertisements

அந்த வகையில் பெர்லா டிஜெரினாவும் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். ​​

31 வயதான பெர்லா டிஜெரினா என்ற இளம்பெண் வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டில் உள்ள சால்டிலோ நகரைச் சேர்ந்தவர்.                                                                                                     

இவர் எரிமலையின் மேல் ஒரு மாத காலம் தங்கி சாதனை படைக்க முயற்சியில் இறங்கினார். சரியாக 32 நாட்களை அங்கு கழிக்க பெர்லா டிஜெரினா திட்டமிட்டுள்ளார்.

வட அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மிக உயரமான மலையாகக் கருதப்படும் பிகோ டி ஒரிசாபாவின் உச்சியில் வசித்து வருகிறார்.

பனியால் போர்த்தப்பட்டிருக்கும் இந்த எரிமலையில் கடல் மட்டத்திலிருந்து 18,491 அடி உயரத்தில் தான் தற்போது பெர்லா தங்கி இருக்கிறார்.

மார்ச் 18ஆம் திகதி முதல் ஏப்ரல் 18ஆம் திகதி வரை தங்க மலை உச்சியில் பெர்லா டிஜெரினா தங்கத் திட்டமிட்டிருக்கிறார்.

மலை உச்சியில் தனது அனுபவத்தை ஆவணப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல பதிவுகளைப் வெளியிட்டு வருகிறார்.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Click To Watch





This will close in 20 seconds