அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கனடா எல்லையில் சடலமாக மீட்பு! நுழைய முயன்ற இந்தியர்கள் கனடா எல்லையில் சடலமாக மீட்பு!
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த இந்தியர்கள் உள்பட 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமேனியா நாடுகளை சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர்.
கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் இந்திய குடும்பத்தினர் உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. அந்த குழந்தையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.