சுவிட்சர்லாந்தில் தடம்புரண்ட ரயில்கள்; குழந்தைகள் உட்பட 12 பேருக்கு நேர்ந்த சோகம்
சுவிட்சர்லாந்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரு ரயில்கள் தடம்புரண்டதில் குழந்தைகள் உட்பட 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை அடித்த புயலில் பெர்ன் நகருக்கு அருகே அமைந்துள்ள லூஷெர்ஸ் மற்றும் புரென் ஜூம் ஹொவ் ஆகிய இடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
புரென் ஜூம் ஹொவ் இல் நடந்த விபத்தில், 9 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை லூஷெர்ஸ் இல் நடந்த விபத்திலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆனால், எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்ற தகவல் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ரயில் தடங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பொலிசார், தீயணைப்புத்துறையினர், மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.