பிரான்ஸில் நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
பிரான்ஸில் நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் நகரில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வசிக்கும் குடும்பம் ஒன்றிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்காவது தளத்தில் இருந்து நான்கு வயது சிறுவன் ஒருவன் தவறி கீழே விழுந்துள்ளார்.
சம்பவத்தின் போது வீட்டில் சிறுவனைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.