சிங்கப்பூரில் Kampong Glam இல் களை கட்டும் நோன்புப் பெருநாள் சந்தை.!
சிங்கப்பூரில் கம்போங் கிளாமில் (Kampong Glam) நோன்புப் பெருநாள் சந்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது.
நேற்று தொடங்கிய அது, அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை செயல்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கம்போங் கிளாம் (Kampong Glam) வட்டாரத்தில் ஆண்டுதோறும் அந்தச் சந்தை நடைபெறுகிறது.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்துடன் இணைந்து அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள அனைத்து உணவு-பானக் கடைகளும் ஹலால் சான்றிதழைப் பெற்றிருக்கும் அல்லது அவற்றின் உரிமையாளர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள்.
நேரடிப் பயிலரங்குகளையும் நடவடிக்கைகளையும் காண, பக்தாத் தெருவில் (Baghdad Street) உள்ள கார் நிறுத்தும் இடம் அருகே உட்கார இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு இசை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
ஆதாரம் : CNA