சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு .!!
சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு பாரியளவில் தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 2026ம் ஆண்டளவில் சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கான பற்றாக்குறை 51000 வீடுகளாக காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது லூசர்ன் நகரின் அளவினை ஒத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரமமான மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய வீடுகள் நிர்மானிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு ஏதுக்களின் அடிப்படையில் இவ்வாறு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு நிலவும் பற்றாக்குறையினால் வாடகைத் தொகை வெகுவாக உயர்வடைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செல்வந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் காணப்பட்டாலும் சுவிட்சர்லாந்தில் வீட்டு உரிமையாளர் எண்ணிக்கை மிகவும் வரையறுக்கப்பட்ட அளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Source:- TamilInfo