நாய் கறி சாப்பிட ஏன் நம்மவர்கள் முன்வருவதில்லை.?
நாய் கறி சாப்பிட ஏன் எவரும் முன்வருவதில்லை.? அட இது தெரியாம போச்சே.! பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு சேருமா? எவ்விதம் இது நியாயம்? நியாயமில்லை தான்.
ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு தண்டனை கொடுத்து பெற்றோர்களை துண்டு துண்டாக அறுக்கும் அளவிற்கு வேதனை கொடுத்து சிலசமயம் விதி உணரச்செய்கின்றது.
நாய் கறி சாப்பிட ஏன் எவரும் முன்வருவதில்லை.. தெருவில் ஏராளம் அலைகிறது ஆனால் கிலோ 800 கொடுத்து ஆடு வாங்கி சாப்பிடுகின்றனர் ஏன்? நாய்கறி விசமா?
என்று கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்குண்டான பதில் இங்கே!
நாய்க்கறி நன்மை தீமை என்பதை பற்றி கடைசியில் பார்க்கலாம் அதற்கு முன் எங்கள் ஊரில் நடந்த ஒரு சம்பவம்.
போலீஸ் ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ் ,தாசில்தார் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம்,கோர்ட் என ஏறத்தாழ அரசு அலுவலகங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் இரண்டு சைவ ஓட்டல்களும்,ஒரு அசைவ ஹோட்டல் இருந்தது.

அந்த அசைவ ஓட்டலில் இருந்து சுமார் 50 டிபன் கேரியரில் மதிய உணவு எல்லா அலுவலகங்களுக்கும் செல்லும்.
அந்த உணவகத்தின் பக்கத்தில் புதிதாக ஒருவர் அசைவ ஹோட்டல் திறந்தார்.ஆனால் ஏற்கனவே இருந்த ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமர்கள் அதிகம் இருந்த காரணத்தினால் இவருக்கு சுமாரான ஓட்டமே இருந்தது.
ஒரு நாள் அந்த நபர் நன்றாக ஓடிக் கொண்டிருந்த அசைவ ஓட்டல் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் நாய் கால்களை வெட்டிப் போட்டுவிட்டு பிரபலமான ஹோட்டலில் நாய் கறி பிரியாணி போடுகிறார் என்று புரளி கிளப்பி விட்டு நோட்டீசும் அடித்து ஒட்டி விட்டார் பெயர் போடாமல்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”left” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
மளாரென்று அந்த ஓட்டலின் விற்பனை சரிந்து விட்டது.ஆனால் இன்றளவும் நம்பிக்கை இருக்கும் ரெகுலர் கஸ்டமர் மட்டும் அங்கே சென்று வந்தார்கள்.
இது நடந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து, பரபரப்பைக் கிளப்பிய ஆசாமியின் மூத்த மகன் ஒருவர் இரண்டு சாலைகளும் சந்திக்கும் ஒரு இடத்தில் வேகத்தடையில் ஏறி இறங்கி தடுமாறி கீழே விழுந்து இறந்து விட்டார்.
அதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து மற்றொரு மகன் அதே இடத்தில் அதே வேகத்தடையில் ஏறி இறங்கி பின்னால் வந்த பேருந்தில் சிக்கி இறந்து விட்டார்.
அதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு மகனும் அதே இடத்தில் அதே சாலை சந்திப்பில் அதே வேகத்தடையில் கீழே விழுந்து இறந்து விட்டார்.
சுமார் 8 மாத காலங்களிலேயே அந்த நபர் மூன்று மகன்களையும் இழந்து புத்திர சோகம் தாளாமல் தாடி மீசையுடன் அலைந்து கொண்டிருந்தார்.
உலகத்திலேயே ரொம்ப கொடுமையானவிஷயம்,பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போதே,அவர்கள் கண்ணெதிரில் அவர்களின் குழந்தைகள் இறக்கும் கொடுமை தான் மிகப்பெரும் கொடுமை.புத்திர சோக கொடுமை வாழ்வின் கடைசிநாள் வரையிலும் எள்ளளவும் மறவாது.
இப்பொழுது நாய்க்கறி க்கு வருவோம்.
உலகத்தில் நன்றிக்கு அடையாளமாக நாயை சொல்வார்கள்.தர்மபுத்திரன் கடைசியில் நான் சொர்க்கம் செல்ல வேண்டுமானால் இந்த நாயும் என் உடனே வரவேண்டுமென்று ஒரு நாயையும் கூட்டி சென்றதாகஇதிகாசம் உண்டு.
இவ்வளவு பெயர் வாங்கிய நாயை மனிதனின் உணவுச் சங்கிலியில் ஒன்றாக யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது.
நாய்க்கறி விஷமாக இருக்கிறதோ,இல்லயோ ஆனால் நாயின் நன்றிக்கு நாம் காட்டும் விசுவாசம் நல்லதாக இருக்கட்டும்.இல்லையேல் நாம் அதனையும் விட தரம் தாழ்ந்து விடுவோம்.
கறி என்றால் எல்லாமே கறி தானே?என்று மறுபடியும் நாய்கறியுடன் வாதிடும் அசைவ பிரியர்களுக்கு ***தாயும் பொண்ணு தான் ,மகளும் பொண்ணு தான்,..அதுக்காக அம்மாவை மணம் முடிக்க கூடாது எஜமான் **
பதிவு செய்தவர் :- செல்லக்கிளி