மணமேடையில் மணமகன் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் ரத்து
மணமேடையில் மணமகன் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் ரத்து அனைவரது முன்னிலையிலும் மணமேடையில் மணமகன் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் நின்ற சம்பவம் ஒன்று இந்திய உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போழுது வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டபோது, திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதி திருமண விழாவை நிறுத்தியுள்ளார். இதனால் அனைவரும் மணப்பண்ணின் குடும்பத்தினரை சமதானப்படுத்த முயன்றும் பெண்ணின் முடிவை மாற்ற முடியவில்லை.
அனைவரின் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று பொலிஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். பொலிஸார் மணப்பெண்ணை சமதானப்படுத்திய போதும் அது நடக்கவில்லை.
மேலும் அந்த பெண் பொலிஸ்நிலையத்தில் அளித்த புகாரில் மண மேடையில் இருந்த போது மணமகன் என்னை தகாதமுறையில் தொட்டதாகவும், அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன் என புகார் அளித்துள்ளார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”right” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மணமகன் விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3000 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறியுள்ளார். மணமகனின் இந்த புகாருக்கு மணமகள் மறுத்துள்ளார். மணமேடையில் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.