Netflix பயன்படுத்தும் கனடா வாழ் மக்களுக்கு எச்சரிக்கை.!!

Netflix பயன்படுத்தும் கனடா வாழ் மக்களுக்கு எச்சரிக்கை.!! உலகின் முதல் நிலை இனிய பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான netflix ஊடாக திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் போன்றவற்றை பார்ப்பவரா நீங்கள் அவ்வாறானால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது.

Netflix பயன்படுத்தும் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச்சொற்களை பிற நபர்களுடன் பகிர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

அதாவது netflix சந்தாதாரர்கள் அல்லாதவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியை தவிர்க்கும் நோக்கில் netflix கனடா நிறுவனம் கடவுச்சொற்களை பகிர்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

netflix கனடா

அதன்படி பயனர் ஒருவர் தான் netflix பயன்படுத்தும் பிரதான ஓர் இடத்தை குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றைய தினத்துடன் நிறைவடைகின்றது.

குறிப்பிட்ட இடத்தை தவிர்ந்த வேறு இடத்தில் குறித்த பயனரின் கடவுச்சொல் ஊடாக நெட்ஃபிக்ஸுக்குள் பிரவேசித்தால் அதனை பிளாக் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 24 மில்லியன் netflix பயனர்கள் சந்தா செலுத்தி வருகின்றனர்.

எனினும் சுமார் 100 மில்லியன் வரையிலான நபர்கள் சந்தா செலுத்தாது கடவுச்சொற்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இலவசமாக நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக netflix நிறுவனத்திற்கு வருடாந்தம் ஏழு முதல் எட்டு பில்லியன் டாலர்கள் வரையில் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நட்டத்தை தவிர்க்கும் வகையில் netflix பயனர்கள் கடவுச் சொற்களை சந்தா பெற்றுக் கொள்ளாத ஒருவருடன் பகிர்வதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தொழில்நுட்ப யுத்திகளை நிறுவனம் எதிர்காலத்தில் கையாளும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisements

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button