கிழக்கில் ஆட்டம் காணும் பிள்ளையானின் அரசியல்..??

கிழக்கில் ஆட்டம் காணும் பிள்ளையானின் அரசியல்..?? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்கள் பலர் தமிழ் தேசியத்தின்பால் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாக இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

கிழக்கை மீட்போம் தனி யுகம் படைப்போம் என பல கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று நிற்கதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் தேசியத்துடன் செயற்பட தீர்மானம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர விசுவாசிகளாக இருந்த பலர் இன்று கட்சித் தலைமையின் நடவடிக்கை காரணமாக கட்சியை விட்டு ஒதுங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில், பிள்ளையானின், அரசியல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சில ஆதரவாளர்களின் கீழ்த்தரமான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளை ஆதரித்த அதிதீவிர விசுவாசிகள் இன்று கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசியத்துடன் செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த காலங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு, துஷ்பிரயோகம் என பல நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் இன்று அவருடைய சில ஆதரவாளர்களின் அடிமட்டத்தனத்தினால் தங்களது குடும்பங்களும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற விடயங்களில் உட்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் படகை விட்டு வெளியேறி தமிழ் தேசியத்துடன் நிற்கின்றனர்.

கிழக்கில், பிள்ளையானின், அரசியல்

சிறைச்சாலையில் இருந்த பிள்ளையான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தங்களது வேலைகளையும் துச்சமாக மதித்து பிள்ளையானுக்காக பாடுபட்டவர்கள் இன்று பிள்ளையானின் உண்மை முகம் தெரிந்தவுடன் தேசியத்துக்குள் உள்நுழைந்துள்ளனர்.

அபிவிருத்தி என்னும் மாயையை காட்டி வாகரையில் செருப்பால் அடித்து திரத்தப்பட்ட பிள்ளையானின் கோட்டை இன்று தமிழ் தேசியத்துடன் நிற்கின்றது.

போலித் தேசியம் – போலி அரசியல்

பிள்ளையானின் போலித் தேசியமும் பிள்ளையானின் போலி அரசியலும் பிள்ளையானின் ஒட்டுக் குழுக்களின் அட்டகாசமும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்களுக்கும் அவ கீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களத்துடன் சேர்ந்து பல முன் நகர்வுகளை ஏற்படுத்தி இருந்த போதிலும் அவைகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

கிழக்கில், பிள்ளையானின், அரசியல்

ஆகவே, அபிவிருத்தி என்னும் மாயையில் பிள்ளையான் செய்த கொலைகள், பிள்ளையான் செய்த கற்பழிப்புகள், பிள்ளையான் செய்த கொடூரங்கள், பிள்ளையானால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள், பிள்ளையானின் செயலாளர்கள் ஐ.நா சபையில் தெரிவித்த வாக்குமூலங்கள் இவை எல்லாமே ஒரு சான்றாக இன்று மக்கள் முன்வந்து கொண்டிருக்கின்றது.

அடிமட்டத்தனமான விமர்சனங்களை முன் வைக்கும் பிள்ளையானின் அடிவிருடிகளின் செயற்பாடு இன்று பிள்ளையானின் தோல்விக்கு காரணமாக மாறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தனக்கு எதிராக ஒரு செய்தி வருவதாக இருந்தால் அந்த ஊடகவியலாளரையும் ஊடகவியலாளர் குடும்பத்தையும் கேவலப்படுத்தும் நடவடிக்கை பிள்ளையானுக்கு ஒரு கைவந்த கலையாக இருந்திருக்கின்றது.

பல ஊடகவியலாளர்களை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டிருக்கின்றது.

இப்படியான ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் இன்று மக்கள் தெளிவுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Source- Jvp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button