சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி மக்களுக்கு எச்சரிக்கை!
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி மக்களுக்கு எச்சரிக்கை! ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி மற்றும் சுவிஸில் மீண்டும் ஒரு புதிய மோசடி தலைகாட்டத் துவங்கியுள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறும் ஒருவர், உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து யாரோ பணம் எடுத்துள்ளார்கள் என்னும் செய்தியை வாடிக்கையாளர்களிடம் கூறுகின்றனர்.
அந்த நபரின் பதற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வங்கி அட்டை ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், உங்கள் ஒரிஜினல் அட்டையைக் கையளிக்கவேண்டும் என்றும் கேட்கின்றனர்.

அத்துடன், PIN எண்ணையும் அவர்கள் கேட்கின்றனர். சொன்னதுபோலவே, ஒரு டெக்சி சாரதி வங்கி அட்டையைப் பெற்றுக்கொள்ள வருகிறார்.
இந்த விடயம் பொலிஸாருக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக, தாங்களே பொலிஸாருக்கு புகாரளித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் தொலைபேசியில் அழைக்கும் வங்கி அலுவலராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் மோசடி நபர்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”grid” align=”left” withids=”” displayby=”cat” orderby=”rand”]
இப்படி ஒரு மோசடி ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் தலைகாட்டத் துவங்கியுள்ளது என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் யாரிடமும் தங்கள் வங்கி அட்டையைக் கொடுக்கவேண்டாம் என்றும், தங்கள் PIN எண்ணை யாரிடமும் தெரிவிக்கவேண்டாம் என்றும் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் வங்கியோ, பொலிஸாரோ, அவற்றை தொலைபேசியில் ஒரு கேட்பதில்லை என மக்களுக்கு பொலிஸார் தெளிவுப்படுத்தியுள்ளனர்.