உடல் எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
உடல் எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பொதுவாக எடை இழப்பு என்று வரும்போது உணவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
நீங்கள் என்ன உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சில கொழுப்பு உணவுகள் உங்கள் எடை இழப்பு முயற்சியையே வீணாக்கலாம்.ஏனெனில் நம்மை அறியாமலே, நாம் அடிக்கடி சில உணவு சேர்க்கைகளை சாப்பிடுகிறோம், இது நமது எடை இழப்பு பெரும் தடையாக இருக்கும்.
எனவே அந்த உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
* உருளைக்கிழங்கு மாவுச்சத்து அடிப்படையிலானது, இது அரிசியுடன் கலந்து, அதிகப்படியான கலோரி அதிகரிப்புக்கு காரணமாகும். தனித்தனியாக, அவற்றை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
* வெள்ளை ரொட்டியில் அதிக கிளைசெமிக் குறியீட்டு உள்ளது, இது உயர் இரத்த சர்க்கரை அளவுகளுக்கு பங்களிக்கிறது மற்றும் நீங்கள் எடை இழக்க விரும்பினால் இந்த சேர்க்கையை அறவே தவிர்க்க வேண்டும்
* சில நேரங்களில் அதிகப்படியான புரதம் உங்கள் செரிமான அமைப்பைக் குழப்பலாம், இது உங்களுக்கேத் தெரியாமல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் சிக்கன் மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரத அடிப்படையிலான உணவுகளை உட்கொள்ள விரும்பினால் தனித்தனியாக சாப்பிடுங்கள்.
* பால் மற்றும் வாழைப்பழம் உங்கள் எடையையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே இரண்டையும் உட்கொள்ள விரும்பினால் குறைந்தது 20-30 நிமிடங்கள் இடைவெளி கொடுப்பது நல்லது.
* பிஸ்கட்கள் மற்றும் குக்கீகள் போன்ற மிகவும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகமாக இருப்பதால், அவை உங்கள் உடல் எடையை சேதப்படுத்தும். இது அதிக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்