உலகின் பழமையான நாயாக போர்ச்சுகல்லை சேர்ந்த நாய் தெரிவு!
உலகின் பழமையான நாய் என்ற கின்னஸ் சாதனையை போர்த்துக்கலில் உள்ள பாபி என அழைக்கப்படும் நாய் ஒன்று படைத்துள்ளது.
1922 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி பிறந்த பாபி என அழைக்கப்படும் குறித்த நாய்க்கு தற்போது 30 வயதும், 268 நாட்களும் ஆகின்றது. இதனை போர்ச்சுகல் அரசாங்கத்தின் செல்லப்பிராணி தரவுத்தளமும், தேசிய கால்நடை மருத்துவர் சங்கமும் உறுதி செய்துள்ளதாக கின்னஸ் சாதனை பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபீரோ டோ அரென்டெஜோ என்ற இனத்தை சேர்ந்த இந்த நாயின் சராசரி ஆயுட் காலம் 12 தொடக்கம், 14 வருடங்களாகும்.
இதற்கு முன்னதாக 29 வயது மதிக்கத்தக்க அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ப்ள10ய் என்ற நாயே பழைமையான நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.