50,000 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்
இன்றும் (1) நாளையும் (2) பூமியை நெருங்கும் வால் நட்சத்திரத்துக்கு வானியலாளர்கள் C/2022E3 என்று பெயரிட்டுள்ளனர்.
இரவு வானம் தெளிவாக இருந்தால், பச்சை ஒளியை வெளிப்படுத்தும் இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகப் பார்க்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் இந்த வால் நட்சத்திரம் இன்றும் (1) நாளையும் (2) பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்து செல்லும் என நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வால் நட்சத்திரம் முன்பு நியாண்டர்தால்கள் பூமியில் இருந்தபோது பூமியைக் கடந்து சென்றது.
இந்த வால் நட்சத்திரம் பூமியை 42 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விடியற்காலையில் வடக்கு வானில் வால் நட்சத்திரம் தெளிவாகத் தெரியும். பிப்ரவரி 10 ஆம் திகதிக்குள், வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் இருக்கும்.
இந்த பச்சை வால்மீன் முதன்முதலில் மார்ச் 2, 2022 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. வால் நட்சத்திரத்தை ஸ்விக்கி டிரான்சிஸ்ட் ஆய்வு மையத்தில் இருந்து வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கலிபோர்னியாவில் உள்ள பாலோமரில் உள்ள கால்டெக் தொலைநோக்கி மூலம் வால் நட்சத்திரம் கண்காணிக்கப்பட்டது. வால் நட்சத்திரம் என்பது பல கிலோமீட்டர் விட்டம் கொண்ட தூசி மற்றும் பனியால் ஆன பந்து ஆகும்.