Windows 10 விற்பனையை நிறுத்தும் மைக்ரோசொப்ட் நிறுவனம்!
Windows 10 விற்பனையை நிறுத்தும் மைக்ரோசொப்ட் நிறுவனம்! மைக்ரோசாப்ட் நாளை முதல் Windows 10 ஐ விற்பனை செய்யாது எனவும், பாவனையாளர்கள் Windows 11இற்கு மாறவேண்டியிருக்கும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனது பயனர்கள் அனைவரையும், Windows 11 ஐ ஏற்கும் பிரசாரத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்று முதல் Windows 7 அல்லது Windows 8 போன்ற பழைய இயங்குதளங்களைப் பயன்படுத்துபவர்கள் Windows 10 மேம்படுத்தலை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Windows 10 இயங்குவதற்கு மிகக் குறைவான சக்தியே தேவைப்படுகிறது. ஆனால் இப்போது அது படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளது.
Windows 11 பயன்பாட்டிற்கு வருவதன் மூலம், தங்கள் சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட கோப்புகளை பாதுகாக்க வழியேற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.