Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிரான்ஸில் நடந்த கொடூர சம்பவம் - தமிழ் குடும்பத்தினர் ஐவர் கொலை - (🔴Video)

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் வீட்டில் நடந்த குடும்பத் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குவர். மேலும் ஐந்து பேர் கத்தி வெட்டு காயத்திற்குள்ளாகியுள்ளனர். அதில் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச் சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்திருந்தனர். மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இறந்தவர்கள், மற்றும் சந்தேக நபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் பலத்த காயம் மற்றும் மயக்க நிலையில் காணப்பட்ட ஒருவர் சந்தேக நபராக சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சிகிச்சைக்காக கிளிச்சியில் உள்ள பியூஜோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments