Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மினுவங்கொட பொலிஸ் நிலையம் மூடப்பட்டது.!

மினுவங்கொட பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மினுவங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சுமார் 85 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட பொலிஸ் நிலையத்தில் உணவகமொன்றை பராமரித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு அவரின் மகனின் மூலமாக கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவங்கொட பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் உணவகம் ஒன்றை பராமரித்து வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் பணிகள் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments