முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வௌ்ளிக்கிழமை தொழுகையின் போதும் ஏனைய தொழுகைகளின் போதும் ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறு இஸ்லாமியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments