பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கையர் தர்ஷன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் தர்ஷன், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை சனம் ஷெட்டி.
அதாவது கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தர்ஷன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments