Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

விஜயகாந்த் உடல் நலம் விசாரித்த ரஜினிகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திரையுலக பிரபலங்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், மக்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலம் குறித்து அவரது மைத்துனர் சுதீஷிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்துள்ளார். இந்த தகவலை அவரது பிஆர்ஓ தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பி வந்த போது ரஜினி அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments