வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலயத்தில் அறநெறி வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
அறநெறி பாடசாலை ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக வேவில் ஆலய பிரதம குருமார்களான சிவஸ்ரீ வே. பாலச்சந்திரக்குருக்கள், சிவஸ்ரீ தி. விக்னேஸ்வரக்குருக்கள், வல்வெட்டி வேவில் விக்னேஸ்வரா சனசமூக நிலைய தலைவர் த. ஸ்ரீதர்சன், வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர் ஆ. ஞானேந்திரன், அறநெறி வகுப்பு ஆசிரியரான எம். தர்சிகா மற்றும் ஆலய பஜனை குழுவினர், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வு மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பித்து கற்பித்தல், விருந்தினர்கள் உரை ஆகியவை இடம்பெற்றன.
0 Comments