Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உங்கள் படுக்கையை காயப்படுத்தாதீங்க… ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

விஜே ரம்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தைக் கலாய்த்து கமெண்ட்ஸ்கள் குவிகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ரம்யா. ஆர்.ஜே.வாகவும் பணியாற்றிய இவர், ‘ஓ காதல் கண்மணி’, ‘வனமகன்’, ‘கேம் ஓவர்’, ‘ஆடை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருக்கும் ரம்யா, ஊரடங்கு காலத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை எப்போதும் பிஸியாகவே வைத்திருந்தார். அடிக்கடி போட்டோஷூட், சமையல் என ரம்யாவின் டைம்லைன் நிரம்பி வழியும்.

படுக்கை, ரம்யாவை, நெட்டிசன்கள்


இந்நிலையில், சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று, அதிக கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. பெட்டில் படுத்து உறங்குவது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், ‘சில நாட்களுக்கு முன்பு என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன். அதன்பின்னர், நானும் படுக்கையும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்துக்கு கமெண்ட் செய்துள்ள நடிகர் பிரசன்னா, ‘ஹலோ? எழுந்தாச்சா? இது பகல்’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘தூங்கும்போது இவ்வளவு மேக்கப்பா?’, ‘பெட்ல தூங்கும்போது கூட ஃபுல் மேக்கப்’ என ரம்யாவைக் கலாய்த்து பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம்விட, ‘நீங்கள் படுக்கையை கவனித்துக் கொள்ளவில்லை. மாறாக, காயப்படுத்துகிறீர்கள். உங்கள் உடல் எடையால் படுக்கை மிகவும் கஷ்டப்படுகிறது’ என நக்கலாக ஒருவர் செய்த கமெண்ட்தான் இதில் ஹைலைட். 

Post a Comment

0 Comments