Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடர்பில் சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்

பிரபல இந்திய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தென்னிலங்கையிலும் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

பிரபல பின்னணி பாடகர் பாலசுப்ரமணியம் பாடல்கள் சிங்களவர்கள் மத்தியலும் பிரசித்தம் பெற்றிருந்தன.


தமிழ் பாடல்கள் மாத்திரமல்லாது, குறிப்பாக அவர் இந்தி திரைப்படங்களில் பாடிய பாடல்கள், சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஊடாபொல என்ற இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பலர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.




கொரோனா காரணமாக இயற்கை எய்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனுக்கு மறுபிறவிக்கான புண்ணியம் கிடைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments