தமிழர் பகுதிகள் எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் தொனியில் தனது முகநூலில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.
அரசின் அடக்குமுறைகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் வடக்கு கிழக்கில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் வெளியிட்டுள்ள காணொளியில்,
இன்றைய தினம் ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் கிழக்கில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, இவர்கள் நாளைய தினம் கடைகளைத் திறந்தால் நான் வந்து கேட்பேன் நேற்றைய தினம் ஏன் திறக்கவில்லை என்று.
இதற்கு எல்லாம் யார் காரணம், அரசாங்கம் இது தொடர்பில் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரியும். இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால், அவர்கள் தாயகம் கேட்பதற்கு சமம்.
இதே நேரத்தில் புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் தமிழ் இளைஞன் ஒருவரால் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உருப்படம் எரிக்கப்பட்டு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சிங்களத்தில் பேசியபோது ஞானசார தேரரின் சகாவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் எமது தமிழ் ஈழ பிரதேசத்தில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடிவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் இது பற்றி தெரிவித்த இளைஞன் "சுமணரத்த தேர்ரே நீ எமது தமிழ் பிரதேசங்களுக்கு வந்து பௌத்த விகாரைகளை அமைக்கிறாய். தமிழர்களுக்கு எந்தநாளும் தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறாய்..
நீ பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டுமாயின் உங்களது சிங்கள பிரதேசத்தில் சென்று அமைத்துக்கொள்ளுங்கள். காலி - மாத்தறை பகுதிக்கு செல்லுங்கள்.. இல்லையெனில் ஹம்பாந்தோட்டையில் சென்று விகாரை அமைத்துக்கொள்ளுங்கள்.
எமது தமிழ் ஈழத்தில் பௌத்த விகாரை அமைக்க நீ யார்.. மட்டக்களப்பு என்பது எமது தமிழ் ஈழ பிரதேசம். அங்கு உனக்கு இருக்க தகுதியில்லை.. மஹிந்தவின் ஊரில் சென்று பெரிய விகாரையை நீ அமைத்துக்கொள்.. தமிழர் பிரதேசம் எமக்குரியது.. கவலைப்படாதே...
விரைவில் தமிழ்ஈழம் மலரும். இன்டைக்கு நான் உன்ன எரிக்கப்போகிறேன் பார்" என குறித்த இளைஞன் கூறியதோடு சுமணரத்ண தேரிரின் உருப்படத்தை எரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
குறித்த பற்றி கருத்து தெரிவித்த சுமணரத்ண தேரர் வெளிநாட்டு புலிகளால் தனது உயிருக்கு ஆபத்தும் அச்சுறுத்தலும் இருப்பதாக தெரிவித்தார்.
0 Comments