சிறுவனின் உதட்டை கடித்த 76 வயது தாத்தா..! கைது செய்த பொலிஸார். இந்திய மாநிலம் கேரளாவில் சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்த 76 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்தவர் மம்முட்டி(76). பிராந்தியம் பள்ளூர் பகுதியில் இவருக்கு உறவினர் வீடு ஒன்று உள்ளது.அங்கு அடிக்கடி செல்வதை மம்முட்டி வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில், தனது உறவினர் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு கட்டிலில் படுத்திருந்த 17 வயது சிறுவனை கட்டிப்பிடித்துள்ளார்.

அத்துடன் சிறுவனின் உதட்டை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் தனது பெற்றோரிடம் முதியவரின் செயல் குறித்து கூறினான்.மகன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் உடனடியாக காவல் நிலையம் சென்று மம்முட்டி மீது புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளூர் பொலிஸார் முதியவர் மம்முட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மம்முட்டி மாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
முதியவர் ஒருவர் 17 வயது சிறுவனிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.