ஜேர்மன் நாட்டவரான பெண் ஒருவர், இரண்டு மகள்களுக்குத் தாயாக இருந்தும், யாஸிடி இன இளம்பெண் ஒருவரை அடிமையாக்கி கணவர் உட்பட பலருக்கு விருந்தாக்க உதவியாக இருந்துள்ளார். தனக்கு மகள்கள் இருந்தும் இளம்பெண்ணை அடிமையாக்கிய ஜேர்மன் பெண்
அந்த 37 வயதுப் பெண், 2014ஆம் ஆண்டு, ஜேர்மனியிலிருந்து தன் கணவனுடன் சிரியாவுக்குச் சென்று ஐ எஸ் அமைப்புடன் நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார். பின்னர் அவரது குடும்பம் ஈராக்குக்கு திரும்பிய நிலையில், 2016ஆம் ஆண்டு யாஸிடி இன இளம்பெண் ஒருவரை அந்த ஜேர்மன் பெண்ணின் கணவர் அடிமையாகக் கொண்டுவந்துள்ளார்.
பலருக்கு விருந்தாக்கப்பட்ட இளம்பெண்
அந்த இளம்பெண், பல்வேறு போராளிகளுக்கு வீட்டு வேலை செய்யவும், அவர்களுடன் பாலுறவுகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். இந்த ஜேர்மன் பெண்ணின் கணவரும் பலமுறை தன் மனைவி அறிய அந்த இளம்பெண்ணை வன்புணர்ந்திருக்கிறார், தாக்கியிருக்கிறார்.
இரண்டு மகள்களுக்குத் தாயாக இருந்தும் அந்தப் பெண் இந்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததுடன், அந்த இளம்பெண் தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக, அவரது பர்தாவை எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். ஐ. எஸ் கட்டுப்பாடுகள் கொண்ட அந்த பகுதியில், பர்தா இல்லாமல் அந்த இளம்பெண்ணால் வீட்டை விட்டு கூட வெளியேறமுடியாது.
2019ஆம் ஆண்டு, ஐ எஸ் அமைப்பு தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அந்த தம்பதியர் ஈராக்கிலிருந்து தப்பியோடும்போது குர்திஷ் படைகளிடம் சிக்கியுள்ளார்கள்.
2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ஆம் திகதி, ஜேர்மனிக்குள் நுழையும்போது, அந்த ஜேர்மன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த யாஸிடி இன இளம்பெண்ணை அடிமையாக்கி கொடுமைப்படுத்தியதற்காக ஜேர்மனியில் நேற்று முதல் அவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
விசாரணை பல வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.