வரி அதிகரிப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை

2024 இல் ஏற்படப்போகும் முக்கிய பிரச்சினை - மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

வரி அதிகரிப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை 2024 வரவு செலவுத் திட்டத்தில் VAT அதிகரிப்புக்குப் பின்னர் 2024 இல் வரிக் கொள்கை ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச இன்று (டிசம்பர் 20) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். குறைந்த வரியே தமது அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படைக் கல் என்றும், 2006 முதல் 2014 வரை இந்த நாடு அனுபவித்த ஒன்பது வருட இடைவிடாத பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2024 இல், முக்கிய பிரச்சினை, மஹிந்த ராஜபக்ஷ, எச்சரிக்கை

மேலும், அதிக வரிச்சுமையின் காரணமாக படித்த மற்றும் உயர் பயிற்சி பெற்ற நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த தேசிய தேர்தல் வரை நிலையான அரசாங்கத்தை பேணுவதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முதன்மையான கடமை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button